இரத்தின கிரீஸ்வரர் திருக்கோவில்

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து 8 km தொலைவில் மணப்பாறை சாலையில் காவிரி தென்கரையில் அய்யர் மலையின் உச்சியில் அமைந்துள்ளது இரத்தின கிரீஸ்வரர் திருக்கோவில்.

ஏறத்தாழ 1200 அடி உயரத்தில் மலைகளையே அஸ்திவாரமாக கொண்டு அமையப்பெற்றுள்ள இந்த கோவில் 2-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது.   இந்த கோயிலுக்கு ரத்தினகிரி,  மாணிக்க மலை, சிவாய மலை  என்ற வேறு பெயர்களும் உண்டு.   தற்போது  மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.  

பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது அஞ்ஞான வாசம் என்ற காலத்தில் மறைந்து வாழ்வதற்காக இந்த மலையை தேர்ந்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது.   மலையின் பின்புறத்தில்  பஞ்சபாண்டவர்கள் தங்கினார்கள் என்பதற்கு ஆதாரமாக பஞ்சு மெத்தை போன்ற ஒரு குகையும் காணப்படுகிறது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனக்கு பரிசு கேட்டு இறைவனிடம் கசிந்து உருகி பாடி நின்றபோது சிவபெருமான் அந்த மலை முழுவதும் ரத்தின மயமாக காட்சி கொடுத்து சுந்தர மூர்த்தி ஸ்வாமிக்கு பொன்முடி பரிசாக வழங்கினாராம்.  அதனால் இந்த மலைக்கு ரத்தனகிரி மலை என்றும் ஆண்டவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர் வந்ததாகவும் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

 மாணிக்கம் வேண்டி வந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நீரால் நிரப்ப சொன்னார். அது எப்படியும் நிரம்பாமல் இருக்கக் கண்டு கோபம் கொண்ட அரசன்  உடைவாளை  ஓச்ச, இறைவன் மாணிக்கத்தை தந்து அருளினார்.  இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவை காணலாம்.

 மலையின் உச்சியில் உள்ள சாமியை தரிசிப்பதற்காக 1017  படிக்கட்டுகளை பக்தர்கள் ஏறிச்செல்ல வேண்டும்.  மலையேறும் பக்தர்கள் இளைப்பாறுவதற்காக இடையிடையே சின்ன மண்டபங்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. 

பக்தர்கள் 689 வது படியை  கடந்துவிட்டால்  இடது புறத்தில் சப்தகன்னிகள் தங்கியிருந்த இடம் நம் கண்களுக்குப் புலப்படும்.

 பக்தர்கள் 800  படிகளை  ஏறி முடித்துவிட்டால்  மலையின் ஒரு பகுதியை அடைந்து விடலாம்.  அந்த இடத்தில்  சுரும்பார் குழலி அம்மன் கோவில் உள்ளது.  இதனருகே கோவில் தோன்றிய போதே உருவான வேம்பு மரம் இன்றும் பச்சை பசேலென்று தலைவிரித்து உள்ளது.   கோவிலின் ஸ்தல விருட்சம் வேம்பு மரம் தான். 

அதன்பின் ஒரு சில படிக்கட்டுகள் ஏறி  விட்டால்  கோவிலின் முதல் பிரகாரம்  வந்துவிடும். 

முதல் பிரகார சன்னதி  இருக்கும் இடம் அழகிய கட்டிட அமைப்புகளுடன் ஓம் என்ற பிரணவத்தை எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இரண்டாம் பிரகாரத்தில்  சன்னதி அமையப் பெற்றுள்ளது.  தினசரி ரத்தினகிரீஸ்வரருக்கு  காவடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.  ஆரிய மன்னன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தினமும் காவிரிக்கு சென்று 2 குடங்களில்  தண்ணீரை தலையில் சுமந்தபடி கோவிலுக்கு நடந்து வந்து அபிஷேகம் செய்கின்றனர்.

 தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

 அகத்தியர் இங்கு சுவாமியை  நண்பகலில் தரிசித்து  அருள் பெற்றமையால் இன்று நண்பகல் தரிசனம் விசேஷம்.  இதனால் இறைவனுக்கு மதிய  சொக்கர் என்றும் பெயர். 

Aiyarmalai or Thiruvatpokki is around 8 Kms from Kulithalai on the way to Manaparai.  The presiding deity is Ratnagiriswarar.  Muthuswamy Dikshitar has sung “ Pahimam Ratnachalanayaka “ in Mukhari on the Lord of this Temple. 
As per mythology, a King from North came to this place in search of gem stones ( rathinam ).  The Lord took the form of a Brahmin and asked the King to fill a tub with Cauveri water and take bath.  Despite his best efforts, the King could not fill the tub.  The King became angry and hit against the Brahmin.  The Lord appeared before the King and stopped the sword ( in Tamil Vaal means sword  and pokki means remove) and gave darshan and the gem stone. Since Shiva stopped the vaal, the place is known as Vaal pokki ( in Tamil, Vaatpokki ) and as the Rathinam was given, He is known as Rathinagiriswarar.  Even today, the scar mark due to the sword is seen on the Lingam. 
As per another legend,  Shiva was waging a war to destroy the demon Andakasura.  Since fresh replicas of the demon were coming from the blood spilt, Shiva created Yogeswari from the flames coming out of his mouth.   The Saptakannikas created by the power of the Trimurtis, Skanda, Indra and Yama added their power to Yogeswari so that the blood of the demon was swallowed before falling and the Asura was destroyed.  In view of this, worshipping the Yogeswari with the Saptakannikas, is important in this kshetra and their shrine is inside a cave in the hill.   
While the Lord is facing west, Mother Karumbarkuzhali is facing east.  As the temple is on top of the hill, the Lord is also called Malaikozhundeesar.  Since worshipping is to be done in the noon, He is called Madhyana Sokkar.  As the temple and its corridors are in the shape of Ohm, it is also known Sivayamalai.   One has to climb 1140 steps to reach the Shiva shrine.  After climbing 750 steps, we can have darshan of Vinayakar and Kazrumbarkuzhali Ambal.   
Around the Shivarathri, the rays of the Sun fall on the Lingam.  There are some unique things in this temple.  One is the lighting of Manivilakku ( bell shaped lamps ).  The second is that the unboiled milk used in abhishekam to the Lord does not become curd till the evening, despite the presence of some particles from the incense stick.  However it becomes good curd in the next morning.  The third is related to a legend. 
A devotee promised to offer his head if he was blessed with a child.  When his wish was fulfilled, he came to this place and cut his head.  While the feet stayed in the foot hills, the head reached the top of the hill.  The idol of this head is anointed with milk and honey and the garland offered to the Lord is later put on this idol.  Yet another unique feature is that no crow flies over this hill as it was believed that when a crow tried to fly over, it was burnt to ashes. 
For the abhishekam, water is brought all the way from Cauveri river which is around 9 Kms away and the pots are carried over the 1140 steps!  Those who want to visit this temple must make sure that they enjoy robust health since one has to climb the over 1000 steps in the hot Sun, as the worshipping of the Lord during noon is considered auspicious. 

Ropeway construction is underway and it is in finishing stage as of December 2021.

Distant view of the temple
Sapthakannika Shrine